
இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதிலும் குறிப்பாக விலங்குகளின் வீடியோக்களுக்கு பஞ்சமே இருக்காது. அதேசமயம் செல்லப்பிராணிகளுடன் குழந்தைகள் செய்யும் வீடியோக்கள் அடிக்கடி இணையத்தில் வைரலாகி வருவது வழக்கம். பொதுவாகவே குழந்தைகள் இருக்கும் இடத்தில் மகிழ்ச்சிக்கு பஞ்சம் இருக்காது.
அதிலும் அவர்களுடன் விலங்குகள் சேர்ந்து கொண்டால் அட்டகாசத்திற்கு அளவே இல்லாமல் போய்விடும். அதன்படி தற்போது வெளியாகி உள்ள வீடியோவில் குழந்தை ஒன்று கொட்டும் மழையில் நனைவதற்கு செல்கின்றது. இதனை அறிந்த குரங்கு குழந்தை மழையில் நடந்தால் சளி பிடித்து விடும் என்று சொல்லாமல் தனது செயல் மூலம் இழுத்து வருகின்றது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வர பெற்றோர்களை விட குழந்தையை இவ்வாறான செல்லப்பிராணிகள் தான் அக்கரையாக பார்த்துக் கொள்கின்றன என நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள்.
மழையில் நனைந்தால் ஜுரம் வந்துவிடும்
எத்தனை அழகாக கூட்டிக் கொண்டு வந்து விட்டு கதவையும் சாத்துவது சிறப்பு
💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜 pic.twitter.com/hY7P1Pm1IQ— ethisundar,🖤❤️🖤❤️🖤❤️ (@ethisundar) July 12, 2023