இத்தாலியின் மலைப்பகுதியில் அமைந்துள்ள ஒரு குக்கிராமத்தில் சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் குழந்தை பிறந்துள்ள நிகழ்வு, அந்த நாட்டு மக்களிடையே பெரும் நெகிழ்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மக்கள் தொகை குறைந்து வரும் சூழலில், பல ஆண்டுகளாகக் குழந்தைகளின் சத்தமே கேட்காத அந்த அமைதியான கிராமத்தில், தற்போது பிறந்துள்ள இந்த “அதிசயக் குழந்தை” ஒரு புதிய நம்பிக்கையை விதைத்துள்ளது.
இந்நிலையில் நீண்ட கால மவுனத்தை உடைத்து ஒலித்த அந்த மழலையின் குரல், அக்கிராமத்தின் வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது. இந்த மகிழ்ச்சியான செய்தியை அந்த கிராமமே ஒன்றிணைந்து கொண்டாடி வருகிறது. இளைஞர்கள் வேலைவாய்ப்பு தேடி நகரங்களுக்குக் குடிபெயர்வதால், இது போன்ற பல மலை கிராமங்கள் முதியவர்கள் மட்டுமே வாழும் பகுதிகளாக மாறி வருகின்றன.
மேலும் இத்தகைய சூழலில், ஒரு தசாப்தங்களுக்குப் பிறகு நிகழ்ந்த இந்த பிறப்பு, கிராமத்தின் மறுமலர்ச்சிக்கு அறிகுறியாகக் கருதப்படுகிறது. அந்தப் பிஞ்சு குழந்தையின் வருகை, கிராமவாசிகளின் கண்களில் கண்ணீரையும் இதயத்தில் பெரும் உற்சாகத்தையும் வரவழைத்துள்ளது.
