மலையாள கலை இயக்குனரும் திரைப்பட கலை ஆராய்ச்சியாளருமான சாபு பிரவதாஸ் காலமானார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சாலை விபத்தில் படுகாயம் அடைந்த இவர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று உயிரிழந்தார். ராஜாவின்டே மகனான இவர் மனு அங்கிள், ரன் பேபி ரன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் மதிப்புமிக்க கேரள மாநில திரைப்பட விருதையும் வென்றுள்ள நிலையில் மருத்துவமனையில் உயிரிழந்தார். இவரது மறைவுக்கு திரைத்துறையினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.