
நாளுக்கு நாள் விஷவாயு தாக்கி உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அரசு இவ்விவகாரத்தில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உயிரிழப்புகளை தடுக்க தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் பலரும் கோரிக்கை விடுத்தது வருகின்றனர். இந்நிலையில் தமிழ்நாட்டில் கடந்த 3 வாரங்களில் மட்டும் 9 மலக்குழி மரணங்கள் நிகழ்ந்ததை சுட்டிக்காட்டி, பா.ரஞ்சித் அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
மலக்குழி மரணங்களை குறிப்பிட்ட சமூக மக்களின் பிரச்சனையாக மட்டும் கருதி கடந்து போகாமல் ஒட்டு மொத்த மனித சமூகத்தின் அவலமாக கருதி, சட்டங்களை இன்னும் கடுமையாக்க வேண்டும் என்றும் மலக்குழி மரணங்களை அரசு உடனே தடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.