தமிழக பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் நாளை (மே 19) கோவையில் பாஜக செயற்குழு கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த செயற்குழு கூட்டத்தில் பாஜக தேசிய பொதுச் செயலாளர் வினோத் தவுடு, சிடி ரவி, பாஜக மேலிட இணைய பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி உள்ளிட்ட பலர் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தின் போது வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வியூகம் குறித்து ஆலோசனை நடத்த வைப்பதாக கூறப்படுகிறது. மேலும் பிரதமர் நரேந்திர மோடியின் 9 ஆண்டுகால சாதனையை தமிழ்நாடு முழுவதும் கொண்டு செல்வது பற்றியும் ஆலோசனை நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது