+1 மாணவர்கள் விடைத்தாள் நகலினை மே 30ம் தேதி முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதவிறக்கம் செய்யலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும், மறுகூட்டல்-II அல்லது மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விரும்பினால், இதே இணையதளத்தில் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, மே 31 முதல் ஜூன் 4க்குள் மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் ஒப்படைக்கவும் அறிவுறுத்தியுள்ளது.

மறுமதிப்பீடுக்கு பாடம் ( ஒவ்வொன்றிற்கும்) ரூ.505 செலுத்த வேண்டும். மறுகூட்டல்-II -க்கு உயிரியல் பாடம் மட்டும் ரூ.305, ஏனையப் பாடங்கள் (ஒவ்வொன்றிற்கும்) ரூ.205 கட்டணமாக செலுத்த வேண்டும்.