டெல்லியில் மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வில் மோசடியில் ஈடுபட்டதாக இருவர் கைது செய்யப்பட்டனர்..

உண்மையான தேர்வர்களுக்குப் பதிலாக நீட் தேர்வு எழுதும் கும்பலை டெல்லி போலீஸார் கைது செய்தனர். எய்ம்ஸ் மாணவர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் பலர் கைது செய்யப்பட உள்ளதாக டெல்லி காவல்துறையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இரண்டு குற்றவாளிகளை டெல்லி போலீசார் இதுவரை கைது செய்துள்ளனர்.

நீட் தேர்வு கொண்டுவரப்பட்டதிலிருந்து முறைகேடுகள் என்பது தொடர்ந்து நடந்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றது. கடந்த ஆண்டு, அதற்கு முந்தைய ஆண்டு கூட இதே தலைநகர் டெல்லிக்கு பக்கத்தில் இருக்கக்கூடிய ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் ஒருவருக்கு பதிலாக வேறு ஒருவர் நீட் தேர்வை எழுதினார்கள் என்ற புகார்கள் எல்லாம் கடுமையாக இருந்தது. இன்னும் சொல்ல போனால் சிபிஐ ஒரு பக்கம் விசாரணை தொடங்கும் அளவிற்கு இந்த விவகாரம் தீவிரமான ஒரு விஷயமாக இருந்தது.

இந்தநிலையில் இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் டெல்லி காவல்துறையினர் மிக முக்கியமான சில விஷயங்களை கண்டுபிடித்துள்ளனர். அதில் நிறைய மாணவர்களுக்கு பதிலாக மருத்துவம் படித்திருக்கக்கூடிய மருத்துவ மாணவர்கள் முறைகேடாக நீட் தேர்வை எழுதியுள்ளனர் என கண்டுபிடித்துள்ளனர். 2பேரை கைது செய்துள்ளதாக டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது. இரண்டு மாணவர்களை கைது செய்து விசாரித்து வருவதாக டெல்லி காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. நீட் தேர்வை எழுதுவதில் ஆள்மாறாட்டம் செய்ததாக டெல்லி காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

https://twitter.com/ANI/status/1676117080792236032