இளநிலை மருத்துவம், துணை மருத்துவ படிப்புகளுக்கு தகுதி சான்று கோரி விண்ணப்பிக்க இன்று (பிப்ரவரி 28) வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. பல்கலைக்கழகத்தின் cms2.tnmgrmuexam.ac.in என்ற இணையதள பக்கத்தின் மூலமாக சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் அதற்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் பி.டி.எஸ், எம்.பி.பி.எஸ், ஆயுஷ் மருத்துவ படிப்புகளிலும், பி பார்ம், நர்சிங் உள்ளிட்ட துணை மருத்துவ படிப்புகளிலும் சேர்வதற்கு மருத்துவப் பல்கலைக்கழகத்திடம் தகுதி சான்று பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அதேசமயம் சி.பி.எஸ்.சி அரசு பாடத்திட்டம் சர்வதேச பாடத்திட்டத்தின் கீழ் பயின்றவர்களுக்கு தகுதி சான்று பெறுவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் வெளிநாடுகளில் சென்று படிப்பை நிறைவு செய்த இந்தியர்கள் மற்றும் வெளிநாட்டவர்கள் மட்டுமே கட்டணம் செலுத்தி தகுதி சான்ற பெரும் நடைமுறை இருக்கிறது. அந்த வகையில் ஏற்கனவே மருத்துவ படிப்புகளில் சேர்ந்து உள்ளவர்கள் தங்களது கல்வி நிறுவனங்களின் மூலமாக தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் தகுதி சான்று கோரி  விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.