சென்னை சைதாப்பேட்டை தொகுதியில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு பயனாளிகள் பதிவு செய்யும் சிறப்பு முகாம் மூன்று இடங்களில் நடத்தப்பட்டது. இந்த முகாமை அமைச்சர் சுப்பிரமணியன் நேற்று தொடங்கி வைத்த நிலையில் அப்போது பேசிய அவர், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தை பொருத்தவரை இந்தியாவுக்கே வழிகாட்டும் அமைப்பாக தமிழகம் விளங்கி கொண்டிருக்கிறது. அந்த வகையில் யாரும் விடுபட்டு போக கூடாது என்ற வகையில் சிறப்பு முகாம்கள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. மிக விரைவில் தமிழகத்தில் 100 தொகுதிகளில் 100 சிறப்பு முகாம்கள் ஒரே நாளில் நடத்தப்படும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.