இத்தாலியில் 56 வயது நபர் ஒருவர் தனது இறந்த தாயின் போலி அடையாளத்தில் மூன்று ஆண்டுகளாக ஓய்வூதியம் பெற்று வந்த மோசடி வழக்கு அதிகாரிகளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. இந்த விசித்திரமான மோசடி, 1993ஆம் ஆண்டு ராபின் வில்லியம்ஸ் நடித்த Mrs. Doubtfire திரைப்படத்தை ஒத்திருக்கிறது என்பதால், இத்தாலி ஊடகங்கள் இதனை “மிஸஸ் டவுட்ஃபயர் ஸ்கேண்டல்” என அழைத்து வருகின்றன.

அதாவதுஅடையாள அட்டை புதுப்பிக்க வந்த பெண்ணின் குரல் ஆழமாகவும், முகம் மற்றும் கழுத்து ஆண்களுக்கு ஒத்த அம்சங்களுடனும் இருந்ததை அரசு ஊழியர் கவனித்தார். இதனால் சந்தேகம் எழுந்த அதிகாரிகள், பழைய பதிவுகளிலிருந்த புகைப்படங்களுடன் புதிய புகைப்படங்களை ஒப்பிட்டுப் பார்த்தனர். இதன் மூலம் பெரிய மோசடி வெளிச்சத்துக்கு வந்தது.

விசாரணையில், குற்றம் சாட்டப்பட்ட நபரின் 82 வயது தாயார் கிராசியெல்லா டல்’ஓக்லியோ இயற்கை காரணங்களால் பல ஆண்டுகளுக்கு முன்பே உயிரிழந்தது தெரியவந்தது. ஆனால் மகன்: தாயின் மரணத்தை அதிகாரிகளிடம் ஒருபோதும் அறிவிக்கவில்லை தாயின் உடலை ஒரு பையில் அடைத்து வீட்டின் சலவை அறையில் மறைத்து வைத்திருந்தார் காலப்போக்கில் அந்த உடல் மம்மியாக மாறியது

தாயின் மரணத்தை மறைத்ததோடு மட்டுமல்லாமல், மகன்: விக், மேக்கப், பெண்கள் அணியும் உடைகள் பயன்படுத்தி தாயின் நடை, குரல், பழக்கவழக்கங்களைப் போலவே நடித்து சமூகத்தினருக்கும், அரசு அலுவலர்களுக்கும் அவர் உயிரோடிருப்பதாக நம்ப வைத்தார் இவ்வாறு அவர் தாயின் பெயரில் ஓய்வூதியம் பெறத் தொடர்ந்து முடிந்தது.

தாயின்: ஓய்வூதியம் மூன்று சொத்துகளில் இருந்து கிடைத்த வருமானம் என இவற்றை சேர்த்து ஆண்டு சுமார் 61,000 டாலர் (₹50 லட்சம்) வரை பெற்றிருப்பது தெரியவந்தது. அடையாள அட்டை புதுப்பிப்பில் ஏற்பட்ட சந்தேகத்தின் அடிப்படையில் தகவல் கிடைத்தவுடன், இத்தாலிய போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று நபரை கைது செய்தனர். அவரது வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த தாயின் மம்மி செய்யப்பட்ட உடலும் மீட்கப்பட்டது. மேலும் இத்தாலி முழுவதும் அதிர்ச்சி பரப்பியுள்ள இந்த மோசடி குறித்து விரிவான விசாரணை நடத்தப்படுகிறது.