டெல்லியில் உள்ள கங்காராம் மருத்துவமனையில் நபர் ஒருவர் மன அழுத்தத்திற்கு சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அந்த நபர் கத்தியை எடுத்து மருத்துவரை குத்த முயற்சித்துள்ளார். தக்க சமயத்தில் காவலாளி மற்றும் சுற்றி இருந்த ஊழியர்கள் சேர்ந்து மருத்துவர் காயமடையாமல் அந்த நபரை தடுத்து நிறுத்திவிட்டனர்.

பலர் சேர்ந்தும் அந்த நபரை கட்டுப்படுத்த முடியாததால் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். எதற்காக அந்த நபர் மருத்துவரை  கத்தியால் தாக்க வந்தார் என்பது பற்றி தெரியாத நிலையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சில நாட்களாகவே  மருத்துவர்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் நாடு முழுவதும் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.