செந்தில் பாலாஜி தொடர்ந்து மேல்முறையீட்டு வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 1ம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.

செந்தில் பாலாஜி வழக்கின் விசாரணை எவ்வாறு நடைபெறுகிறது. அடுத்தடுத்து என்னென்ன மாதிரியான முன்னேற்றங்கள் இந்த வழக்கில் நடைபெறப்போகிறது என்பது பலரும் எதிர்பார்க்கக் கூடிய ஒரு மிக முக்கியமான விஷயமாக இருக்கின்றது. நிறைய விவாதங்களை ஏற்படுத்தக்கூடிய ஒரு வழக்காகவும் இருக்கிறது. அந்த வகையில் செந்தில் பாலாஜி மற்றும் மனைவி மேகலாதொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீதான இரண்டாம் நாள் விசாரணை இன்றைய தினம் நீதிபதி போபண்ணா மற்றும் எம் எம் சுந்தரேஷ் ஆகிய நீதிபதிகள் அடங்கிய அமர்வில் சரியாக 2 மணிக்கு தொடங்கியது.  அப்போது செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் கபில் சிபல் இன்றைய தினம் வாதங்களை முன்வைத்தார்.

குறிப்பாக ஏற்கனவே அவர் சொன்னதை போலவே, அமலாக்கத்துறைக்கு கைது செய்ய அதிகாரம் இல்லை என்ற விஷயத்தை உச்சநீதிமன்றம் இதற்கு முன்பு வழங்கிய பல்வேறு தீர்ப்புகளை சுட்டிக்காட்டி  சொல்லி வந்தார். அப்போது இடையில் குறிப்பிட்ட நீதிபதிகள், சட்டவிரோத தடுப்பு சட்டம் பிரிவு 19 இன் கீழ் அமலாக்கதுறையுடைய அதிகாரிகளுக்கு கைது செய்வதற்கான அதிகாரம் இருக்கிறது தானே.. ஒருவரை கைது செய்வது என்பது அவரிடம் இருந்து நிறைய ஆதாரங்களையும், தகவல்களையும் பெற வேண்டும் என்பதாகத்தான்.. அத்தகைய கைது நடவடிக்கையை  தண்டனையாக நீங்கள் பார்க்கக் கூடாது என்பதாக சொல்லப்பட்டிருந்தது.

தொடர்ந்து, செந்தில் பாலாஜி தரப்பு மூத்த வழக்கறிஞர் கபில் சிபில், புலனாய்வு மற்றும் விசாரணையை தவறாக எடுத்துக் கொள்ளப்படுகின்றது. குறிப்பாக இந்த வழக்கில் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாகவோ அல்லது எதிராகவோ வரலாம். ஆனால் இது சட்ட ரீதியிலாக தவறாக பயன்படுத்தப்படுகிறது என்ற விஷயம் வாதிடப்பட்டது. அதற்கு அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, இது அரசியல் சார்ந்த வாதங்களாக நாங்கள் பார்க்கிறோம். எங்கள் அமைப்பு மீது களங்கம் விளைவிக்கும் வகையில், இந்த வாதங்கள் இருக்கிறது.

இதனை ஏற்றுக் கொள்ள முடியாது, இருக்கக்கூடிய தரவுகள் அடிப்படையில் மட்டுமே வாதங்களை முன்வைக்க வேண்டும் என்ற மிக முக்கியமான எதிர்ப்பினை அவர் பதிவு செய்திருக்கிறார். அது மட்டும் இல்லாமல் சட்ட விரோத பண பரிவர்த்தனை சடுப்பு சட்டத்தின் கீழ் தவறான கைதுக்காக ஒரு அதிகாரிக்கு 2 ஆண்டுகள் சிறை விதிக்கலாம். உதாரணமாக ,செந்தில் பாலாஜி கைது செய்தது தவறு என ஒருவேளை ஆதாரங்களோடு நிரூபிக்கப்படும் பட்சத்தில் யார் அந்த கைது நடவடிக்கையை எடுத்தார்களோ அந்த அதிகாரிக்கு 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என்ற விதியில் இருக்கிறது..

எனவே எந்த ஒரு அதிகாரியுமே தகுந்த ஆதாரங்கள் இல்லாமல் அதை செய்ய மாட்டார்கள் என்ற விஷயத்தை தெரிவித்தார். அதற்கு குறுக்கிட்ட கபில் சிபல், அந்த மாதிரி இதுவரைக்கும் எத்தனை எத்தனை அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்? எத்தனை பேர் இதுவரை 2 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றுள்ளனர்? என கேள்வி எழுப்பினார். மேலும் இது இதெல்லாம் இருக்கிறது, ஆனால் நடைமுறையில் இல்லை என வாதிட்டார்..

தொடர்ந்து வாதங்கள், பிரதிவாதங்கள் நடைபெற்ற நிலையில், வழக்கின் விசாரணை ஆகஸ்ட் 1ம் தேதி, அதாவது வரும் செவ்வாய்க்கிழமை மதியம் 12 மணிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இன்னும் கபில் சிபில் ஒரு மணி நேரம் கேட்டார்.. செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் முகுல் ரோத்தகி குறைந்தபட்சம் 2 மணி நேரம் கேட்டனர்..

இதற்கு பின் அமலாக்கத்துறை தரப்பு, ஒரு நாள் முழுதும் வாதங்கள் முன்வைக்க வேண்டும். ஆனால் ஆகஸ்ட் 3ம் தேதியிலிருந்து மிக முக்கியமான அரசியல் சாசன அமர்வு உட்கார போறாங்க.. எனவே 2ம் தேதி வாத பிரதிவாதங்கள் முடிந்து, தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டால் மட்டும் தான், அதற்கு இடையில் ஆகஸ்ட் 15க்குள் தீர்ப்பு வருவதற்கான வாய்ப்பு இருக்கிறது. எனவே எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக முடிக்க வேண்டும் என அமலாக்கத்துறை நினைக்கிறார்கள்.. மேலும் செந்தில் பாலாஜி தரப்பு, இது மிக முக்கியமான விஷயம் நல்ல டீடெயிலாக கருத்துக்கள், வாதங்கள் கேட்கப்பட வேண்டும் என கேட்டனர். எனவே நீதிபதிகள் இதற்கு அனுமதி வழங்கியுள்ளனர்..