கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் உயிரிழந்ததை தொடர்ந்து அவரது மூத்த மகன் சார்லஸ் மன்னராக அரியணையில் அமர்ந்தார். அவருக்கான முடி சூட்டு விழா மே மாதம் ஆறாம் தேதி வெகு விமர்சையாக லண்டனில் வைத்து நடைபெற்றது. இந்நிலையில் முடி சூட்டு விழாவை குறிக்கும் விதமாக மன்னர் சார்லஸின் உருவம் பொறிக்கப்பட்ட சிறப்பு நாணயம் வெளியிடப்பட்டுள்ளது.

தி ராயல் மென்ட் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தயாரித்த இந்த 50 பென்ஸ் நாணயங்கள் நாடு முழுவதிலும் இருக்கும் தபால் நிலையங்கள் மற்றும் வங்கி கிளைகளில் விநியோகிக்கப்படுகிறது. இது மன்னர் சார்லஸின் உருவப்படம் பொறித்து புழக்கத்தில் வெளிவந்த இரண்டாவது அதிகாரப்பூர்வ நாணயமாகும்.