2011 ஆம் ஆண்டில் இருந்து சிரியாவிலும் ஈராக்கிலும் ஐஎஸ் அமைப்பின் ஆதிக்கம் அதிகமாக இருந்தது. இந்த அமைப்பிற்கு எதிராக 2018 இல் அமெரிக்கா களம் இறங்கியது. இதனால் அந்த அமைப்பு பெருமளவு அழிக்கப்பட்டது. அதேபோன்று 2019 ஆம் ஆண்டு ஐஎஸ் அமைப்பின் தலைவரும் கொல்லப்பட்டார். இதனால் சிரியாவில் ஐஎஸ் அமைப்பின் ஆதிக்கத்திற்கு முடிவு வந்தது. ஆனாலும் அதன் ஆதரவாளர்கள் சிலர் மறைந்திருந்து அவ்வப்போது தாக்குதலில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் சிரியா வீரர்களை ஏற்றிக் கொண்டு வந்த பேருந்து சிரியா – ஈராக் எல்லையின் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென துப்பாக்கி ஏந்திய கும்பல் ஒன்று பேருந்தை மறித்து தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 10 பேர் படுகாயம் அடைந்ததாகவும் 23 வீரர்கள் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.