நைஜர் நாட்டில் ராணுவத்தினர் ஜனநாயக ஆட்சியை கவிழ்த்து அதிகாரத்தை கைப்பற்றியதோடு அதிபராக இருந்த முகமது பாசுமையும் கைது செய்துள்ளனர். இதற்கு ஐநா மற்றும் உலக நாடுகள் கண்டனம் தெரிவித்ததற்கு மேற்கத்திய நாடுகள் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட வேண்டாம் என நைஜர் ராணுவம் எச்சரித்தது. இந்நிலையில் மத்திய அரசு நைஜரில் இருக்கும் இந்தியர்கள் அந்நாட்டை விட்டு உடனடியாக வெளியேற வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது குறித்து வெளியுறவுத்துறை செய்த தொடர்பாளர் கூறிய போது, “மத்திய அரசு நைஜர் நாட்டின் நிலவரத்தை கவனித்துக் கொண்டிருக்கிறது. இந்தியர்கள் நைஜர் நாட்டை விட்டு உடனடியாக வெளியேற அறிவுறுத்தப்படுகின்றனர். 250க்கும் மேற்பட்ட இந்தியர்கள் அந்நாட்டில் இருக்கிறார்கள்” எனக் கூறியுள்ளார்.