பீகாரின் முசாபர்பூர் மாவட்டத்தில் நடந்ததாகக் கூறப்படும் சுஜாதா குமாரி என்ற பெண்ணின் கெளரவக் கொலைச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும்ந தனது காதலனைத் திருமணம் செய்துகொண்டதற்காக, குடும்பத்தினரால் சுஜாதா குமாரி மிகக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டதாக அவரது கணவர் சமூக வலைதளங்களில் கண்ணீருடன் உதவி கோரியுள்ளார்.
இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தனது உயிருக்கும் ஆபத்து இருப்பதாகக் கூறி, தனக்கு நீதி வேண்டும் என்றும் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்துத் தகவலறிந்த காவல்துறையினர், சம்பந்தப்பட்ட இடத்திற்குச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கெளரவக் கொலைகள் சமூகத்தில் இன்னும் ஒரு தீராத வடுவாக நீடிக்கும் நிலையில், இத்தகைய கொடூரச் செயலில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்ற குரல் வலுத்து வருகிறது.
இந்நிலையில் சுஜாதா குமாரியின் கணவர் வெளியிட்ட இந்த உருக்கமான வீடியோ, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது, மேலும் இந்த வழக்கை விரைவாக விசாரணை நடத்தி, பாதிக்கப்பட்டவருக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
