உச்ச நீதிமன்றத்தில் தற்போது விவாதிக்கப்பட்டு வரும் முக்கியமான வழக்கு, திருமண உறவில் பாலியல் வன்கொடுமையை குற்றமாகக் கருத வேண்டுமா என்ற கேள்வியைக் குறிப்பதாகும். பாரதிய நியாய சன்ஹிதா (Bharatiya Nyaya Sanhita) பிரிவு 375 விதிவிலக்கின் அடிப்படையில், 18 வயதுக்கு மேற்பட்ட மனைவியுடன் கணவன் கட்டாய பாலுறவு கொள்வது குற்றமாகக் கருதப்படுவதில்லை. ஆனால், இந்த விதிவிலக்கு பெண்களின் உரிமைகளை பறிக்கின்றது என பல அமைப்புகள் மற்றும் பெண்கள் உரிமை ஆதரவாளர்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இந்த சட்டம் 18 வயதுக்கு குறைந்த மனைவியுடன் கணவன் கட்டாய பாலியல் உறவு கொள்வது குற்றமில்லை என்று கூறுவதால் இந்த சட்டத்தை தடை செய்ய வேண்டும் என்று பல்வேறு நபர்கள் மனு கொடுத்த நிலையில் அந்த மனுக்கள் தொடர்பான விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் முன்னதாக மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்திருந்தது. அதில் திருமண உறவு என்பது புனிதமானது என்பதால் கணவன் மனைவி இடையே கட்டாய உடலுறவு கொள்வதை குற்றமாக்கினால் அது திருமணத்தில் விரிசல் ஏற்படும் என்பதால் இதனை குற்றம் என கருத முடியாது எனவும் இது தொடர்பாக முடிவெடுக்க நாடாளுமன்றத்திற்கு மட்டும்தான் அதிகாரம் இருக்கிறது எனவும் உச்ச நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கருணா நண்டி பாலியல் உறவுகளில் பெண்ணின் சம்மதம் முக்கியம் என்று வாதிவிட்டார். அப்போது குறிக்கிட்ட நீதிபதி ஒருவர் ஒருவர் தன் மனைவியிடம் பாலியல் வன்கொடுமை குற்றத்தில் ஈடுபட்டதாக அறிவித்தால் அது ஒரு புதிய குற்றமாக மாற வாய்ப்பு இருக்காதா என்று கேள்வி எழுப்பினார். அதோடு பாலியல் வன்கொடுமை என்பதற்கான வரையறையை எப்படி தான் நிர்ணயிப்பது என்றும் கேள்வி எழுப்பினார். அதன் பின் பேசிய வழக்கறிஞர் அந்த சட்டத்தில் கணவனால் மனைவி கட்டாய உடலுறவு ஆட்கொள்ளப்பட்டால் அது குற்றமில்லை என்று இருக்கிறது.

லிவ் இன் உறவில் இருக்கும்போது பெண்ணை கட்டாயமாக உடலுறவுக்கு உட்படுத்தினால் அது பாலியல் குற்றம் என்று கருதப்படுகிறது. அப்படி இருக்கும்போது ஒரு கொடூர கணவனால் மனைவி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும்போது அதனை பாலியல் வன்கொடுமை இல்லை என்று சட்டம் கூறுகிறது. பாலியல் வன்கொடுமை குற்றமாக கருதப்படும் நிலையில் கணவன் அந்தஸ்தில் இருக்கும் ஒருவர் மட்டும் அதனை செய்தால் குற்றமாகாது என்று கூறப்படுகிறது.

மேலும் மத்திய அரசு கணவன் மனைவியை பாலியல் பலாத்காரம் செய்வது குற்றமாகாது என்று சொன்னதை குறிப்பிட்ட நீதிபதிகள் இங்கிலாந்தில் கணவன் மனைவியை கட்டாய பாலுறவுக்கு உட்படுத்தினால் அது பாலியல் குற்றம் என்று கடந்த 2003 ஆம் ஆண்டு ஒரு வழக்கில் தீர்ப்பு வழங்கியதாக கூறினர். மேலும் இது தொடர்பாக இன்று உச்ச நீதிமன்றத்தில் காரசார விவாதங்கள் நடைபெற்ற நிலையில் வழக்கின் விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.