மனிதர்களைப் போலவே விலங்குகளும் தற்போது சாதனை படைத்து வருகின்றன. அதிலும் ஒரு எலி சாதனை படைத்துள்ளது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. பொதுவாக எலிகளின் ஆயுட்காலம் அதிகபட்சமாக 2 வருடங்கள் தான். ஆனால் கலிபோர்னியாவில் உள்ள சான் டியாகோ உயிரியல் பூங்காவில் ஒன்பது வருடங்கள் மற்றும் ஐந்து மாதங்கள் வாழ்ந்த எலி கின்னஸ் சாதனையில் இடம் பெற்றுள்ளது.

இந்த உலகில் இதுவரை வாழ்ந்த எலிகளில் அதிக வயது உடையது இந்த எலிதான். அந்த மிருக காட்சி சாலையில் 9 வருடங்களுக்கு முன்பு பிறந்த பசிபிக் பாக்கெட் எலி இப்போது உலகிலேயே மிக வயதான எலி என்று நம்பப்படுகின்றது. இந்தச் செய்தி தற்போது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.