துருக்கி சிரியா எல்லையில் நேற்று அதிகாலை 4.17 மணிக்கு 7.8 ரிக்டர் அளவில் பயங்கரமான நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டது. இதனை அடுத்து அடுத்தடுத்து மூன்று பெரிய அளவிலான நிலநடுக்கத்துடன் 60க்கும் மேற்பட்ட நில அதிர்வுகள் கடந்த இரண்டு நாட்களாக துருக்கி சரியா எல்லையில் உணரப்பட்டுள்ளதும் இதனால் இந்த இரண்டு நாடுகளிலும் உள்ள ஆயிரக்கணக்கான அடுக்குமாடி கட்டிடங்கள் இடித்து மலை போல குவிந்து கிடக்கிறது. இன்னும் பல கட்டிடங்கள் இடிந்து விடும் அபாயத்தில் இருக்கிறது. அதிகாலை நேரத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் காரணமாக தூங்கிக்கொண்டிருந்த மக்கள் தப்பிக்க வழி இல்லாமல் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்தனர்.

இந்நிலையில் நிலநடுக்கத்தால் இதுவரை 9,400 பேர் பலியான துயரச்சம்பவம் நடந்துள்ளது. இதுவரை மொத்தமாக 30,000 பேர் நிலநடுக்கத்தால் காயமடைந்துள்ளனர். பலி எண்ணிக்கை உயர வாய்ப்புள்ளது. இந்நிலையில், கடந்த 10 ஆண்டுகளில் இதுவே மிகப்பெரும் அழிவு என்பது தெரியவந்துள்ளது. 2011ல் ஜப்பானில் ஏற்பட்ட சுனாமியில் 20,000 பேரும், 2015ல் நேபால் நிலநடுக்கத்தில் 8,800 பேரும் பலியாகியிருந்தனர்.