அமெரிக்க நாட்டின் மென்டானா பகுதியில் உள்ள அணு ஆயுத ஏவுதளத்திற்கு மேலே சீனாவின் மர்ம உளவுப் பலூன் பறந்து கொண்டிருப்பதாக கடந்த வாரம் தகவல் வெளியானது. இந்த சம்பவம் அந்நாட்டில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.  மேலும் பென்டகன் மூத்த அதிகாரி மர்ம உளவு பலூன் தங்கள் நாட்டு வான் பரப்பின் மீது பரந்த காரணத்திற்காக சீனாவை கடுமையாக சாடியுள்ளார். ஆனால் சீனாவோ அது உளவு பலூன் அல்ல. வானிலை ஆய்வுக்காக தாங்கள் அனுப்பிய ஒரு வின் ஓடம் தான் என விளக்கம் அளித்தது. ஆனால் இதனை ஏற்க அமெரிக்கா மறுத்து விட்டது.

இதனையடுத்து அட்லாண்டிக் பெருங்கடலில் பறந்து கொண்டிருந்த சீனாவின் உளவு பலூனை சுட்டு விழித்த அமெரிக்க ராணுவத்திற்கு அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவின் பேரில் உளவு பலூன் ராணுவ அதிகாரிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டது. அவ்வாறு சுட்டு வீழ்த்தப்பட்ட உலவுப் பலூன் அட்லாண்டிக் கடலில் விழுந்தது. இந்த உளவு பலூனை மீட்பதற்காக அமெரிக்க கடற்படை மற்றும் கடலோர காவல் படை ஆகியவை தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்த நிலையில் அட்லாண்டிக் கடலில் விழுந்த சீன உளவு பலூனை அமெரிக்கா கைப்பற்றி உள்ளது. அதுமட்டுமல்லாமல் உளவு பலூனில் இருந்த கருவிகளின் சிதறிய பாகங்களையும் அமெரிக்க விமானப்படை கைப்பற்றி ஆய்வு நடத்தி வருகின்றது.