சமூக ஊடகங்களில் தற்போது அதிர்ச்சி, ஆச்சரியம், சிரிப்பு ஆகிய அனைத்தையும் ஒருசேர தரும் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.  இந்த வீடியோவில் , “அந்த பாவம் பாம்புதான் தவறான இடத்தில் சிக்கியிருப்பதாக நினைத்துக்கொண்டிருக்க வேண்டும்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.

அந்த வீடியோவில், ஒரு குடிபோதையோ அல்லது பயமே இல்லாதவனோ போல தோன்றும் நபர், தனது கழுத்தில் உயிருள்ள பாம்பை சுற்றி, அதை சிறு பூச்சி போல  நடத்திக்கொண்டு நடக்கிறார்! அந்த பாம்பு  அவர்  கழுத்தில் சுழன்றுகொண்டே இருக்க, அந்த நபருக்கு பயமே இல்லை என்பதுபோல் தோன்றுகிறது.

“>

 

பாம்புகள் எப்போதும் மனிதர்களிடம் எச்சரிக்கையுடன் நடந்துகொள்கின்றன. ஆனால் இங்கு, அந்த நபர் பாம்பை அலட்சியமாக தூக்கிக்கொண்டு நடப்பது, பார்ப்பவர்களை பயத்திலும் வியப்பிலும் ஆழ்த்தியுள்ளது.

இந்த வீடியோ, “பயம் எனும் உணர்வு ஒருவனை பாதுகாக்கும், அதே சமயம், பயமில்லாமையால் வரும் முடிவுகள் அபாயகரமாக இருக்கலாம்” என்பதை நினைவூட்டுகிறது. நெட்டிசன்களின் வித்தியாசமான விமர்சனங்களும், அந்த நபரின் துணிவும் – இணைய உலகில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வீடியோ பயத்தை மறந்தவன் ஒரு நபரை காட்டுகிறதா? இல்லை பாம்பையே பயமுறுத்தும் மனிதரை காட்டுகிறதா?