திருச்சூர் மாவட்டத்தில் செப்டம்பர் 12-ம் தேதி நடைபெற்ற பொது நிகழ்ச்சியில், வேலாயுதன் என்ற முதியவர், மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபியிடம் அரசு வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் வீடு வழங்குமாறு மனு கொடுக்க முயன்றார்.
ஆனால், அவர் அந்த மனுவை நிராகரித்து, பொதுமக்கள் முன்னிலையில் அதை ஏற்க மறுத்த சம்பவம் வீடியோவாக பதிவாகி, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி, நெட்டிசன்கள் கடும் விமர்சனங்களை பதிவு செய்துள்ளனர். ஒரு மத்திய அமைச்சராக, பொதுமக்களின் மனுவை நிராகரிக்காமல் ஏற்க வேண்டும் என்பதே பலரது விமர்சனமாக இருந்தது.
#Kerala: P.T Kochu Velayudhan, an elderly resident of Pullu in #Thrissur, was left disheartened after Union Minister #SureshGopi declined to accept his petition for a new house. A video of the incident, which took place during the Kalunk Amitabh Development Meeting, went viral in… pic.twitter.com/jwlP8oIcYo
— South First (@TheSouthfirst) September 15, 2025
“>
விமர்சனங்களுக்கு பதிலளித்த மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி, தனது பேஸ்புக் பக்கத்தில், “நான் ஒரு மக்கள் பிரதிநிதி என்பதால், என்னால் செய்யக்கூடிய விஷயங்கள், செய்ய முடியாத விஷயங்கள் எனக்கு தெளிவாக தெரியும். வீட்டு வசதி என்பது மாநில அரசின் எல்லைக்குள்பட்ட திட்டம். எனவே, அந்தப் பணியை மாநில அரசு மேற்கொள்வதே சிறந்தது.
നിസ്സഹായനും വൃദ്ധനുമായ ആ മനുഷ്യൻ എന്ത് പ്രതീക്ഷയോടെയായിരിക്കും മുന്നിൽ ഒരപേക്ഷയുമായി ചെന്ന് നിന്നത്…!
കരുണയുടെ ഒരു നോട്ടമോ സഹാനുഭൂതി നിറഞ്ഞ ഒരു വാക്കോ പറയാതെ,
“ഇതൊന്നും എംപിയുടെ പണിയല്ല” എന്ന് പറഞ്ഞു നിഷ്ക്കരുണം അയാളെ മടക്കി അയക്കുമ്പോൾ
തകർന്നു മടങ്ങി പോകുന്ന ആ മനുഷ്യന്റെ… pic.twitter.com/05BBLO0pL3— വരത്തൻ (@varath_an) September 12, 2025
“>
பொய்யான வாக்குறுதிகளை வழங்குவது எனது பாணி அல்ல” எனக் குறிப்பிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து, சிலர் இந்த சம்பவத்தை தங்கள் அரசியல் தேவைகளுக்காக பயன்படுத்த முயல்கிறார்கள் எனவும் அவர் குற்றம்சாட்டினார். இதற்கிடையே, கேரளாவில் ஆளும் சிபிஎம் அரசு, வீடு கேட்ட வேலாயுதன் என்பவருக்கு வீடு வழங்கப்படும் என உறுதியளித்துள்ளது.
