நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக் கழகங்களில் ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காக   “CU-Chayan” என்ற ஒருங்கிணைந்த இணையதள போர்ட்டலை யுஜிசி உருவாக்கியுள்ளது. இந்த போர்டலில் விண்ணப்பதாரர் ஒருமுறை உள்ளே நுழைந்தால் போதும். அனைத்து மத்திய பல்கலைக்கழகங்களின் ஆசிரியர் பணியிடங்களின் விவரங்களையும் அதிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.

இந்த போர்டல் மூலம் மட்டுமே விண்ணப்பத்தை அனுப்ப முடியும். இதுகுறித்து யுஜிசி தலைவர் எம் ஜெகதேஷ் குமார், அனைத்து மத்திய பல்கலைக்கழகங்களிலும் (சியு) காலியிடங்களை பட்டியலிடுவதற்கான பொதுவான தளத்தை இந்த போர்டல் வழங்கும், மேலும் இது ஆட்சேர்ப்பு செயல்முறையை முழுவதுமாக ஆன்லைனில் மாற்றும் என்றார்.