இந்தியாவில் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு இரண்டு முறை அகலவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. அதே சமயம் மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு பொங்கல் மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஊதிய உயர்வு அல்லது பதவி உயர்வு போன்ற சலுகைகள் வழங்கப்படுகின்றன . அதன்படி மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் ஆக அகலவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பை விரைவில் வெளியாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது .

இந்தியாவின் பண வீக்கம் தற்போது கணிசமாக உயர்ந்துள்ள நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலை மாதத்திற்கான அகலவிலைப்படி மூன்று சதவீதம் மட்டுமே உயரும் என்றும் தகவல் வெளியானது. இருந்தாலும் மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் ஆக நான்கு சதவீதம் அகலவிலை படி உயர்வு வழங்கப்படலாம் என கூறப்படுகிறது . ஏற்கனவே மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜனவரி மாதம் 4% அகலவிலைப்படி உயர்வு வழங்கப்பட்ட நிலையில் தற்போது நான்கு சதவீதம் உயர்வு வழங்கப்பட்டால் 46 சதவீதத்தின் அடிப்படையில் ஊழியர்களுக்கு அகலவிலைப்படி உயர்வு  கிடைக்கும். இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.