அண்மை காலங்களில் மத்திய அரசு ஊழியர்கள் சில விஷயங்களுக்காக தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். அதாவது, பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டு வருவது, 8-வது ஊதியக்குழுவை அமைப்பது, 18 மாத நிலுவைத்தொகையை அளிப்பது உள்ளிட்டவை அரசு தங்களுக்காக செய்யவேண்டும் என ஊழியர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் 7-வது ஊதியக்குழுவிற்கு பின், 8 வது ஊதியக்குழு பற்றிய விவாதங்களும் பரிசீலனைகளும் தொடங்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதோடு 8-வது ஊதியக்குழுவின் கோப்பும் தயார் நிலையில் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட சூழலில் அடுத்த வருடம் மத்திய அரசு, ஊழியர்களுக்கு பெரிய அறிவிப்பை வெளியிடக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளத்தில் பெரிய அதிகரிப்பு இருக்கலாம் என கூறப்படுகிறது.