கொரோனா தாக்குதலின் போது அலுவலகத்துக்கு வராமல் வீட்டில் இருந்தே வேலை செய்யும் வாய்ப்பு, ஒருசில துறைகளில் கிடைக்கப் பெற்று பெண்கள் மிகவும் பயனடைந்தனர். அதிலும் குறிப்பாக ஐடி துறையில் மிகவும் சிறப்பாக பயனளித்து வந்தது. இதையடுத்து கொரோனா கட்டுக்குள் வரப்பட்டு சூழ்நிலை சீராகி விட்டதால் சுமார் 3 வருடங்களுக்கு பின் தற்போது இந்த சலுகையை ஐடி துறையில் உள்ள அனைத்து நிறுவனங்களும், ஆன்லைன் வர்த்தக துறையில் உள்ள அமேசான், பிளிப்கார்ட் போன்ற பன்னாட்டு பெரிய நிறுவனங்களும் நிறுத்திவிட்டது.

அனைத்து ஊழியர்களும் அலுவலகத்தில் இருந்துதான் பணிப்புரிய வேண்டும் என உத்தரவிட்டு இருக்கிறது. இந்த உத்தரவு புது சிக்கலை சில நிறுவனங்களுக்கு ஏற்படுத்தி இருப்பதாக தெரியவந்துள்ளது. டாடா குழுமத்தின் டி.சி.எஸ்., ஐ.டி. துறையின் ஒரு மிகப் பெரிய முன்னணி நிறுவனம் ஆகும். இங்கு ஊழியர்கள் அனைவரும் கட்டாயம் அலுவலகம் வந்துதான் பணிபுரிய வேண்டும் என வலியுறுத்தப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக ஒரு எதிர்பாராத திருப்பமாக பெரும்பாலான பெண் பணியாளர்கள் தங்களது வேலையை ராஜினாமா செய்துவிட்டதாக தெரிகிறது.