மதுரை விமான நிலையாயத்திலிருந்து மலேசியா, சிங்கப்பூர், மஸ்கட், ஓமன், துபாய், இலங்கை, அபுதாபி, பகரின் உள்ளிட்ட நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. நாள்தோறும் லட்சக்கணக்கான பயணிகள் விமான பயணம் மேற்கொண்டு வருகிறார்கள். இந்நிலையில் அக்.22-ம் தேதி முதல் மதுரை- சிங்கப்பூர் இடையே இரு மார்க்கத்திலும் தினமும் விமானம் இயக்கப்படும் என ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

கூடுதல் விவரங்களுக்கு தங்களது அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம் எனக் கூறியுள்ளது. இந்த அறிவிப்பு சிங்கப்பூர் வாழ் தமிழர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. மேலும், தற்போது டிக்கெட் முன்பதிவும் நடந்து வருகிறது