தமிழகத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையானது அமைச்சர் முத்து சாமியிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் டாஸ்மாக் நிர்வாகத்தில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் குறிப்பாக கூடுதலாக பாட்டிலுக்கு பத்து ரூபாய் வசூலித்தால் ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மேலும் வெளிநாட்டு இறக்குமதி மதுபானங்களின் விலை உயர்த்தப்பட்டது.

இந்த வரிசையில் தற்பொழுது தமிழக முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் புதிய பொலிவுடன் நவீனமயமாக்க டாஸ்மாக் நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. முதல் கட்டமாக ஒரு மாவட்டத்திற்கு ஐந்து கடைகள் விதம் 200 டாஸ்மாக் கடைகள் நவீனப்படுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது. மது பிரியர்களை கவரும் வகையில் மின்னொளியில் மதுக்கடைகளை அழகுப்படுத்தவும் மது வகைகளின் விலையை டிஜிட்டல் போர்டில் வைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.