தமிழகத்தில் வீடு மற்றும் மனை போன்ற சொத்துக்களை வாங்கும் பொழுது அதற்கான மதிப்பில் ஏழு சதவீதம் முத்திரை தீர்வை, இரண்டு சதவீதம் பதிவு கட்டணத்தை செலுத்த வேண்டும். மத்திய அரசு பரிந்துரையின் அடிப்படையில் சொத்து விற்பனை பதிவுக்கான முத்திரை தீர்வையை ஐந்து சதவீதமாக குறைக்க வேண்டும். ஆனால் இந்த விஷயத்தில் மத்திய அரசு தொடர்ந்து மௌனம் காத்து வரும் நிலையில் 2021 இல் திமுக ஆட்சிக்கு வந்ததுக்கு பிறகு மகளிர் பயன்பெறும் விதமாக பல திட்டங்களை அறிவிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் சொத்து வாங்கும் மகளிருக்கு பத்திரப்பதிவில் சலுகை வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. இந்த நிலையில் இதுகுறித்து பத்திரப்பதிவுத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், நாட்டின் பல மாநிலங்களில் உள்ள சிறப்பு அம்சங்களை பத்திரப்பதிவில் கடைபிடிக்க தமிழக அரசு முன்னுரிமை அளித்து வருகிறது. அந்த வகையில் மகளிர் பெயரில் பதிவாகும் பத்திரங்களுக்கு தீர்வை கட்டணத்தில் சலுகை வழங்குவதற்கான சாத்திய கூறுகளை ஆராய்ந்து வருகிறோம். இது குறித்து அரசு விரைவில் முடிவு எடுக்கும் என்று கூறியுள்ளார்.