தமிழகத்தில் டாஸ்மாக் மதுக் கடைகளில் விற்பனை செய்யப்பட்ட பாட்டில்களை மீண்டும் திரும்பப் பெறும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் மூலம் சுற்றுச்சூழலை பாதுகாப்பதுடன், பிளாஸ்டிக் மற்றும் கண்ணாடி கழிவுகளை குறைக்கும் நோக்கமும் உள்ளது. ஆனால், இந்த திட்டத்திற்கு டாஸ்மாக் ஊழியர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். கூடுதல் பணிச்சுமை, காலிபாட்டில்களை வைக்க கடைகளில் இடவசதி இல்லாதது போன்ற காரணங்களை சுட்டிக் காட்டி, ஊழியர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இதனால் திட்டம் இடைநிறுத்தப்படுமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
இந்த சூழ்நிலையில், திட்டத்தை செயல்படுத்தும் வழிமுறைகள் மற்றும் நடைமுறைகளை மதிப்பீடு செய்ய டாஸ்மாக் நிர்வாகம் ஒரு குழுவை அமைத்துள்ளது. அந்த குழு அனைத்து மாவட்டங்களிலும் நிலவரங்களை ஆய்வு செய்து, 5 நாட்களுக்குள் முழுமையான அறிக்கையை தாக்கல் செய்யும் வகையில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையின் அடிப்படையில் திட்டத்தின் போக்குவரத்து, சேமிப்பு மற்றும் பணிநிலை மாற்றங்களைச் செயல்படுத்தப்படும் எனவும், ஊழியர்களின் மனநிலையை கருத்தில் கொண்டு தீர்வு காணப்படும் எனவும் டாஸ்மாக் மேலாளர் விளக்கமளித்துள்ளார்.
