ஈரானில் நிலவும் கடும் ஒடுக்குமுறைக்கு எதிராக அந்நாட்டுப் பெண்கள் முன்னெடுத்துள்ள புதிய வடிவிலான போராட்டம் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. 2026 ஆம் ஆண்டின் எழுச்சியாகக் கருதப்படும் இந்தப் போராட்டத்தில், ஈரானியப் பெண்கள் நாட்டின் உச்சக் தலைவர் அயதுல்லா அலி காமேனியின் புகைப்படங்களை எரித்து, அதிலிருந்து தங்கள் சிகரெட்டுகளைப் பற்றவைக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

மேலும் இது வெறும் புகைப்பிடிக்கும் செயல் அல்ல, மாறாக தசாப்தங்களாகத் தங்களை ஒடுக்கி வரும் மதவாத ஆட்சிக்கும், கட்டாய ஆடைக்கட்டுப்பாடுகளுக்கும் எதிரான ஒரு துணிச்சலான சவாலாகவும், ஆதிக்க அதிகாரத்தின் மீதான கடும் வெறுப்பின் அடையாளமாகவும் பார்க்கப்படுகிறது. இந்த ‘சிகரெட் புரட்சி’, ஈரானிய சமூகத்தில் நிலவும் ஆழ்ந்த அதிருப்தியையும், மாற்றத்திற்கான தாகத்தையும் பிரதிபலிக்கிறது.

“>

2022-ல் மஹ்சா அமினியின் மரணத்திற்குப் பிறகு வெடித்த போராட்டங்களின் தொடர்ச்சியாக, தற்போது பெண்கள் தங்கள் தனிமனித சுதந்திரத்தைப் பறிக்கும் சட்டங்களுக்கு எதிராகப் பகிரங்கமாகப் போர்க்கொடி தூக்கியுள்ளனர். மதத் தலைவர்களின் உருவப்படங்களை எரிகின்றன.

மேலும் ஆட்சியாளர்களின் புனித பிம்பத்தைச் சிதைப்பதோடு தங்களின் அடிப்படை உரிமைகளுக்காக எத்தகைய ஆபத்தையும் எதிர்கொள்ளத் தயார் என்ற செய்தியை இந்தப் பெண்கள் உலகிற்கு உரக்கச் சொல்கின்றனர். இது ஈரானிய அதிகார வர்க்கத்திற்கு விடுக்கப்பட்டுள்ள நேரடி எச்சரிக்கையாகக் கருதப்படுகிறது.