மணிப்பூரில் குகி சமூகத்தினருக்கும் மேய்தி சமூகத்தினருக்கும் இடையே மே மாதம் மூன்றாம் தேதி தொடங்கிய மோதல் இன்று வரை தொடர்ந்து வருகிறது. இந்த வன்முறையில் பல அதிர்ச்சிகர சம்பவங்கள் நடைபெற்று அவ்வப்போது வெளிச்சத்திற்கு வருகிறது. இந்நிலையில் ஒரு ஜோடி கலப்பு திருமணம் செய்தது.  அதில் கணவர் மெய்தி சமூகத்தை சார்ந்தவர் மனைவி குகி சமூகத்தை சேர்ந்தவர். இது பற்றி தெரிந்து கொண்டவர்கள் குகி சமூகத்தை சேர்ந்த பெண்ணை வலுக்கட்டாயமாக வெளியேற்றியுள்ளனர்.

கோகிரிசாங் என்ற அந்த பெண் கூறுகையில் ஒரு மாதமாக கணவரிடம் பேசவில்லை, அவரது போன் சுவிட்ச் ஆஃப் என்று வருகிறது. எந்த நிலையில் இருக்கிறார் என ஒன்றும் தெரியவில்லை.மெய்தி சமூகத்தை சேர்ந்தவரை திருமணம் செய்தால் என்னையும் மெய்தி என்று அடையாளம் கூறுவார்கள் என்று நினைத்தேன். ஆனால் எனது ஆதாரில் பெயரை பார்த்தவர்கள் நான் குகி  சமூகப் பெண் என்று என்னை வெளியேற்றி விட்டனர்.

பிரதமர் மோடியும் அமித்ஷாவும் இணைந்து எனது குழந்தை தந்தையையும் அதன் தாத்தா பாட்டியையும் பார்ப்பதற்கு உதவ வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளார். மேலும் தான் உயிருடன் தான் இருக்கிறேன் என்று தனது கணவர் மற்றும் உறவினர்களுக்கு இதன் மூலம் தெரிவித்துக் கொள்வதாகவும் கூறியுள்ளார்.