கர்நாடகா மாநிலம் பெங்களூரில் உள்ள HRBR லேஅவுட் பகுதியில் வசித்து வருபவர்கள் சித்தப்பா பசவராஜ் – கெஞ்சம்மா தம்பதியினர். ஆறு மாதங்களுக்கு முன்பு இத்தம்பதிக்கு திருமணம் நடைபெற்ற நிலையில் பசவராஜ் வீட்டு எரிவாயு சிலிண்டர்களை வீடு வீடாக சப்ளை செய்யும் பணிபுரிகிறார். கெஞ்சமா அருகில் உள்ள வீடுகளில் வீட்டு வேலை செய்து வந்தார்.
இந்நிலையில் நேற்று கெஞ்சமா தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்துள்ளார். இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து விரைந்து வந்தவர்கள் விசாரணை மேற்கொண்டதில் பசவராஜ் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்த தகராறு செய்து கெஞ்சம்மாவின் கழுத்தை நெரித்து கொலை செய்தது தெரியவந்தது.
