குவாகாத்தியில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, திருமணம் ஆகாத பெண்கள் உரிய வயதில் திருமணம் செய்து கொள்ள வேண்டும். அப்போதுதான் தாய்மை அடைவதில் எந்த சிக்கலும் ஏற்படாது. ஒரு பெண் தாய்மை அடைவதற்கு 22 வயது முதல் 30 வயது வரை சரியான காலமாக இருக்கும். பெண்கள் திருமணத்திற்கு பிறகு தாய்மை அடைய வெகு நாட்கள் காத்திருக்கக் கூடாது. அது பல பிரச்சினைகளை ஏற்படுத்தும் இதுவரை திருமணமாகாத பெண்கள் விரைவாக திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்.

மேலும், 14 வயதுக்குட்பட்ட சிறுமிகளுடன் உடலுறவு கொண்டவர்கள் 6 மாதங்களில் கைது செய்யப்படுவார்கள். அது அவர்களின் கணவனாக இருந்தாலும் கைதுதான். 18 வயதுக்குட்பட்ட சிறுமிகளை திருமணம் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுப்போம் என்று கூறியுள்ளார்