மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையம் பட்டப்படிப்பு தகுதியிலான ஒருங்கிணைந்த தேர்வுக்கான அறிவிப்பை விரைவில் வெளியிட உள்ள நிலையில் பயிற்சி வகுப்புகள் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடத்துவதற்கு அரசு சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தொழில் சார் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இந்த தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சி வகுப்புகள் வருகின்ற பிப்ரவரி 1ஆம் தேதி முதல் தொடங்க உள்ளதாக விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இந்தப் போட்டி தேர்வுகளில் மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வில் விண்ணப்பித்தவர்கள் கலந்து கொள்ளலாம் எனவும் இந்த தேர்வுக்கான கல்வி தகுதியாக ஏதாவது ஒரு பட்டப் படிப்பு முடித்திருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கான பாடத்திட்டத்தில் உள்ள பிரிவுகளுக்கான வகுப்புகளும் வாரம் தோறும் மாதிரி தேர்வுகளும் நடத்தப்படும். மத்திய அரசு பணிகளில் தமிழ் மாணவர்கள் அதிகம் இல்லாத காரணத்தால் இந்த பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு அதன் மூலம் மாணவர்கள் தேர்வுக்கு தயாராகி வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த முயற்சியை தமிழக அரசு எடுத்துள்ளது.