நாய்கள் என்றாலே அனைவருக்கும் பயம் தான். ஒரு சிலருக்கோ நாய்களைப் பார்த்தால் உற்சாகமாக இருக்கும். அவர்கள் தங்களுடைய வீடுகளில் ஏராளமான நாய்களை வளர்த்து வருகிறார்கள். இதனால் அவர்களுக்கு அது மகிழ்ச்சியாக இருந்தாலும் பக்கத்து வீடுகளில் வசிப்பவர்களுக்கு தொல்லையாகவே இருக்கிறது. இந்த நிலையில் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் வீடுகளில் வளர்க்கும் நாய்களால் பக்கத்து வீட்டில் வசிப்பவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டதாக கூறி பிரச்சனையாகி உள்ளது.

இதுகுறித்து திருவனந்தபுரம் மாநகராட்சிக்கு புகார் வந்துள்ளது இந்த நிலையில் ஒரு வீட்டில் 2 நாய்களுக்கு மேல் வளர்க்க தடை விதிக்க திருவனந்தபுரம் மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. கூடுதலாக நாய் வளர்க்க, தனியாக பணம் செலுத்தி லைசன்ஸ் பெற வேண்டும் என்றும் கட்டுப்பாடு வளர்க்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு ரூ.1000, ரூ.750, ரூ.500 என வசூலிக்கவுள்ளதாகவும், அரசிடம் உரிய அனுமதி பெற்று இந்த திட்டம் செயல்படுத்தப்படும் எனவும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.