மகாராஷ்டிரா மாநிலம் பீட் நகரில் வருடம் தோறும் விவசாய திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. 180 அங்காடிகள் விவசாய திருவிழாவில் திறக்கப்பட்ட நிலையில் விவசாயிகள் பயன்படுத்தும் விவசாயம் சார்ந்த உபகரணங்கள் உள்ளிட்டவை அங்கு காட்சிப்படுத்தப்பட்டன. இதில் ஒரு அங்காடி மட்டும் திருவிழாவுக்கு வந்த அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. கர்நாடகாவை சேர்ந்த கஜேந்திரா என்ற எருமை மாடு தான் அது. சினிமாவில் வருவது போல சிறப்பு அலங்காரத்தோடு அந்த எருமை மாடு ஜொலித்தது.

சுற்றுலா பயணிகள் விழாவிற்கு வந்தபோது அனைவரும் செல்ஃபி மற்றும் புகைப்படம் எடுக்க முண்டியடித்துக் கொண்டனர். இந்த மாட்டில் அவ்வளவு ஸ்பெஷல் என்ன? என்று கேட்டால் அதன் உரிமையாளர் கொடுத்த விளக்கம் பலரையும் ஆச்சரியப்பட வைத்தது. இந்த மாட்டினுடைய உரிமையாளர் கஜேந்திரா இதற்கு உணவாக ஒரு நாளைக்கு 15 லிட்டர் பால், 3 கிலோ ஆப்பிள், கரும்பு, புல் என்று மற்ற நாடுகளைப் போல இல்லாமல் குறிப்பிட்ட உணவுகளை மட்டும் கொடுப்பதாகவும் அதை மட்டுமே இந்த மாடு சாப்பிடுவதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த மாட்டை பஞ்சாப் சென்று வாங்கியதாகவும் 15 வருடங்களாக பராமரித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். இந்த மாடு ஏறக்குறைய ஒன்றை கோடி ரூபாய் வரைக்கும் விலைக்கு கேட்பதாக உரிமையாளர் கூறுகிறார். குடும்பத்தில் ஒருவர் போல இந்த மாட்டை வளர்த்து விட்டதால் விற்க மனம் இல்லாமல் வீட்டில் 50க்கும் மேற்பட்ட எருமை மாடுகளை வளர்த்து அதன் மூலமாக வருவாய் ஈட்டி வருவதாகவும், இந்த மாட்டை விற்கும் அவசியம் இல்லை என்றும் கூறியுள்ளர்.