நாட்டில் பணவீக்கம் அதிகரித்து வருவதால் வங்கிகள் வட்டி விகிதத்தை உயர்த்தி வருகிறது. அந்த வகையில் தற்போது கரூர் வைசியா வங்கியும் வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. அதன்படி வாடிக்கையாளர்களின் சேமிப்பு கணக்கில் 5 லட்சத்திற்கு உட்பட்ட தொகைக்கு 2.25 சதவீதமும், 5 லட்சம் முதல் 10 லட்சம் வரையிலான தொகைக்கு 2.50 சதவீதமும், 10 லட்சம் முதல் ஒரு கோடி வரையிலான தொகைக்கு 3 சதவீதம் வரையும் வட்டி கிடைக்கும்.

அதன் பிறகு சேமிப்பு கணக்கில் ஒரு கோடி முதல் 100 கோடி வரை இருந்தால் 3.25 சதவீதம் வட்டியும், 100 கோடி முதல் 150 கோடி வரை இருந்தால் 5 சதவீத வட்டியும், 150 கோடிக்கும் மேல் இருந்தால் 5.25 சதவீதமும் வட்டி கிடைக்கும். மேலும் இந்த புதிய வட்டி விகித முறை ஜனவரி 28-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.