தமிழக அரசியல் களத்தில் கட்சிக் கூட்டங்களுக்கு வரும் தொண்டர்களுக்கு வழங்கப்படும் உணவு எப்போதும் விவாதப் பொருளாகவே இருந்து வருகிறது. அந்த வகையில், தற்போது எக்ஸ் (X) வலைதளத்தில் வைரலாகி வரும் வீடியோ ஒன்றில், திமுக கூட்டத்திற்குத் தொடர்ந்து செல்லும் பெண் ஒருவர், அங்கு வழங்கப்படும் உணவின் தரத்தைப் பற்றி ஒரு ‘ஃபுட் பிளாக்கர்’ போலவே விவரித்துள்ளார். அதில், தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டத்தில் வெறும் தக்காளி சாதம் மட்டுமே வழங்கப்பட்டதாகவும், ஆனால் திமுக கூட்டத்தில் தரமான மட்டன் பிரியாணி வழங்கப்படுவதாகவும் அவர் மிகவும் பெருமையுடன் பேசியுள்ளார். உணவின் சுவை மற்றும் தரம் குறித்து அவர் கொடுத்த இந்த ‘லைவ் ரிவ்யூ’ அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இத தான் தேடிட்டு இருந்தேன்.
சந்திரமுகி ஒவ்வொரு நகையை காட்டுற மாதிரி food காட்டுது.
மாச சம்பளமா குடுக்குறாங்க போல. எல்லா meeting போய் food review பண்ணுது. 😂😂😂 pic.twitter.com/KqD5cbDpf0
— BINDHU (@_BindhuR_) March 10, 2026
இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வரும் நெட்டிசன்கள், அந்தப் பெண்ணை ஒரு புதிய பாணி ‘அரசியல் ஃபுட் பிளாக்கர்’ என்று குறிப்பிட்டு கடுமையாக ட்ரோல் செய்து வருகின்றனர். “கொள்கையைப் பார்க்காமல் சாப்பாட்டைப் பார்த்துப் போகிறீர்களா?” என்ற கேள்விகள் ஒருபுறம் எழுந்தாலும், மட்டன் பிரியாணிக்கும் தக்காளி சாதத்திற்கும் அவர் செய்த அந்த ஒப்பீடு இணையத்தில் சிரிப்பலையை உண்டாக்கியுள்ளது. அரசியல் கூட்டங்களை ஒரு ஹோட்டல் ரிவ்யூ போல மாற்றிய அந்தப் பெண்ணின் பேச்சு, தற்போது மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு நல்ல தீனியாக அமைந்து, இணையம் முழுக்க காட்டுத்தீயாய் பரவி வருகிறது.
