சமூக வலைதளங்களில் தினமும் வினோதமான உணவு சோதனைகள் வைரலாவது வழக்கம் என்றாலும், தற்போது வெளியாகியுள்ள ஒரு வீடியோ நெட்டிசன்களை உச்சக்கட்ட அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ‘itsmejuliette’ என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டுள்ள அந்த வீடியோவில், இளம் பெண் ஒருவர் பலரும் விரும்பி உண்ணும் ‘பட்டர் சிக்கனை’ வைத்து ஐஸ்கிரீம் தயாரித்துள்ளார். முதலில் சிக்கனை மசாலா போட்டு ஊறவைத்து, பின்னர் அதில் பால் கலந்து மிக்ஸியில் போட்டு அரைத்து ஒரு கூழ் போன்ற கலவையை உருவாக்கியுள்ளார். இதனை ஒரு பாத்திரத்தில் ஊற்றி ப்ரீசரில் வைத்து உறைய வைத்த பிறகு, ஒரு ஐஸ்கிரீம் ஸ்கூப் மூலம் எடுத்து கோனில் வைத்து பரிமாறியது காண்போரை முகம் சுளிக்க வைத்துள்ளது.
இந்த வினோதமான வீடியோ இணையத்தில் தீயாய் பரவி வரும் நிலையில், உணவை நேசிப்பவர்கள் அந்தப் பெண்ணை சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். “இந்த கொடுமையை பார்ப்பதற்குள் என் கண்கள் ஏன் குருடாகவில்லை?” என்றும், “இந்த ஜென்மத்தில் உன்னை மன்னிக்கவே முடியாது” என்றும் நெட்டிசன்கள் தங்களது குமுறல்களை கமெண்ட் செக்ஷனில் கொட்டி வருகின்றனர். பொதுவாக ரொட்டி அல்லது சாதத்துடன் சாப்பிடும் காரசாரமான பட்டர் சிக்கனை, குளிரூட்டப்பட்ட ஐஸ்கிரீமாக மாற்றிய இந்த ‘விபரீத முயற்சி’ தற்போது இணையத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
