திமுக தலைவர் ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதி தோல்வி குறித்தும், அதனால் திமுக தொண்டர்களிடையே ஏற்பட்டுள்ள தொய்வு குறித்தும் அமைச்சர் கே.என். நேரு மிகவும் உருக்கமாகப் பேசியுள்ளார். தொகுதிக்கு நல்லது செய்தால் மட்டுமே தேர்தலில் வெற்றி பெறலாம் என்று யாராவது சொன்னால் இனி அதை நம்ப வேண்டாம் எனக் குறிப்பிட்ட அவர், மக்கள் நினைத்தால் எவ்வளவு செய்திருந்தாலும் தூக்கி எறிந்து விடுவார்கள் என்பதற்கு ஸ்டாலினின் தோல்வியே ஒரு மிகப்பெரிய உதாரணம் என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

​ஒரு சட்டமன்ற உறுப்பினராக ஐந்து ஆண்டு காலத்தில் மாதத்திற்கு இரண்டு முறை நேரில் சென்று, கொளத்தூர் தொகுதிக்கு அணு அணுவாகப் பார்த்துப் பார்த்து அத்தனை திட்டங்களையும் ஸ்டாலின் செய்திருந்தார் என்றும் நேரு கூறியுள்ளார். ஆனால், சென்னையைப் பொறுத்தவரை அலை போல வீசிய தவெக அலையினால் இந்த வெற்றி வாய்ப்பு பறிபோனதாகவும், இந்த ரிசல்ட்தான் திமுக தோழர்களை மிகவும் சுணங்க வைத்து, ‘என்னடா நம்ம தலைவருக்கு இப்படிப் போயிட்டதே’ என்று ஏங்க வைத்துவிட்டதாகவும் நேரு ஓப்பனாகப் பேசியுள்ளார்.