ரஷ்யாவின் தலைநகரான மாஸ்கோவில் நடைபெற்ற மக்கள் கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொண்ட புதின் மக்களிடம் பேசுகையில் நமது முன்னோர்கள் ஐந்து அல்லது அதற்கும் அதிகமாக குழந்தைகளை பெற்றுக் கொண்டு பலமான தலைமுறை சேர்ந்த குடும்பங்களை உருவாக்குவதை பாரம்பரிய வழக்கமாக வைத்திருந்தனர்.

எனது பாட்டியின் வம்சத்தில் 8 அல்லது அதற்கும் அதிகமான குழந்தைகளை பெற்று வளர்த்தனர். இதனை மனதில் கொண்டு ரஷ்யாவின் மக்கள் தொகையை அதிகரிக்க தங்கள் பங்களிப்பாக இன்றைய இளம் தலைமுறை பெண்கள் எட்டு அல்லது அதற்கும் அதிகமான குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.