தமிழக முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் அவர்கள், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்துப் பேசியது தமிழக அரசியலில் மிகப்பெரிய பேசுபொருளாக மாறியுள்ளது. இந்தச் சந்திப்பு குறித்துப் பல்வேறு அரசியல் தலைவர்களும் கருத்துத் தெரிவித்து வரும் நிலையில், காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் அவர்கள் விஜய்யின் இந்த நடவடிக்கையை வெகுவாகப் பாராட்டியுள்ளார். “ஸ்டாலினை முதல்வர் விஜய் சந்தித்தது ஒரு முதிர்ச்சியான அரசியல் நடவடிக்கை” என்று அவர் புகழ்ந்து தள்ளியுள்ளார்.
மேலும், “கண்ணியத்தை உள்ளடக்கிய இத்தகைய அரசியலையே தமிழக மக்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். தேர்தல் களத்தில் நிலவிய கசப்புகளை மறந்து, மக்கள் நலனுக்காகவும், ஜனநாயக மாண்புகளைக் காக்கவும் இரு பெரும் தலைவர்கள் சந்தித்துக் கொண்டது ஒரு ஆரோக்கியமான தொடக்கம் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். மாணிக்கம் தாகூரின் இந்தப் பாராட்டு, தவெக மற்றும் காங்கிரஸ் இடையே ஒரு சுமுகமான உறவு மலருமா என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.
