தமிழகத்தில் பெண்களுக்கு ஆயிரம் வழங்கும் உரிமை தொகைத்திட்டம் வரும் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் தொடங்கப்பட இருக்கிறது. இதற்காக டோக்கன்கள் வழங்கப்பட்ட விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டு வருகிறது.  மேலும் மகளிர் உரிமை தொகைக்கான விண்ணப்பங்களை ஆக.1-4க்குள் விநியோகம் செய்து முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் ஆக.4ம் தேதி முதல் மீண்டும் விண்ணப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் 1000 மகளிர் உரிமைத் தொகைக்கான விண்ணப்பம் அளிக்கத் தவறியவர்களுக்காக இன்றும், நாளையும் சிறப்பு முகாம்கள் நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. 2வது கட்டத்துக்கான விண்ணப்பங்களை விநியோகிக்கும் பணி ஆக. 4 முதல் தொடங்கவுள்ளது. மேலும், முதல்கட்டத்தில் பெறப்பட்ட விண்ணப்பங்களில் இதுவரை 74.9 லட்சம் மகளிரின் விவரங்கள் கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளது.