இந்தியாவில் ஒவ்வொரு மாத தொடக்கத்திலும் சிலிண்டர் விலையில் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது பிப்ரவரி மாதம் முதல் புதிய விதிமுறைகள் அவளுக்கு வர உள்ளது. இந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் பிப்ரவரி ஒன்றாம் தேதி சிலிண்டரின் விலையில் மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனைப் போலவே பிப்ரவரி 1 முதல் தேசிய பென்ஷன் திட்டத்துக்கான விதிமுறைகள் மாற்றம் செய்யப்படுகின்றது. தேசிய பென்ஷன் திட்ட கணக்கிலிருந்து முதலீட்டாளர்கள் 25 சதவீதத்திற்கும் அதிகமான தொகையை முன்கூட்டி எடுக்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் fastag கேஒய்சி சரிபார்ப்பை ஜனவரி 31ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும். பிப்ரவரி 1 முதல் kyc சரிபார்ப்பு முழுமை அடையவில்லை என்றால் உங்களுடைய FASTag செயல் இழக்கப்படும். அடுத்து பிப்ரவரி 1ஆம் தேதி முதல் IMPS முறை மூலம் ஒருவருக்கு ஐந்து லட்சத்திற்கும் அதிகமாக பணம் அனுப்பும்போது பயனாளியின் பெயரை கட்டாயம் சேர்க்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.