தமிழகத்தில் பொதுமக்கள் மே மாத கோடை விடுமுறையை கொண்டாட தங்கள் சொந்த ஊருக்கு சென்றுள்ளனர். இதற்காக அரசு சிறப்பு பேருந்துகள் மற்றும் ரயில்களை ஏற்பாடு செய்தது. இதற்கு முன்னதாக ஜூலை 1 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ஜூலை 7ஆம் தேதிக்கு பள்ளிகள் திறப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக ஜூன் 3ஆம் தேதி அதாவது நாளை முதல் ஜூன் 6-ம் தேதி வரை தமிழக முழுவதிலும் இருந்து பொதுமக்கள் குடும்பத்தோடு தங்கள் இருப்பிடங்களுக்கு பயணிப்பார்கள். இதற்காக சென்னைக்கு 2200 அரசு பேருந்துகளும் 500 கூடுதல் பேருந்துகளும் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவை போதுமானதாக இருக்காது என்பதால் தென் தமிழக மாவட்டங்களில் இருந்து கூடுதலாக பேருந்துகளை பெற்று நிலைமையை சமாளிக்க முயன்று வருவதாக தமிழக போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.
