சட்டசபை தேர்தலின் போது திமுக சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில் மாதந்தோறும் குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. திமுக ஆட்சியைப் பிடித்ததை தொடர்ந்து இத்திட்டம் குறித்த எதிர்பார்ப்பு பெண்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.திமுக அரசு அறிவித்துள்ள தேர்தல் அறிவிப்பு அறிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு வரும் நிலையில் இந்த தொகையானது வரும், ஜுன் மாதம் 3ஆம் தேதி கருணாநிதி பிறந்தநாளில், ரூ.1,000 உரிமை தொகை வழங்கும் திட்டம் தொங்கும் என தகவல்கள் வெளியான நிலையில்  இந்த  திட்டத்தை, கூட்டுறவு வங்கி சார்பில் ரேஷன் கடைகளில் பட்டுவாடா செய்ய அரசு முடிவு செய்துள்ளது.

இந்த திட்டம் செப்டம்பர் மாதம் முதல் அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியான பயனாளிகள் தேர்வு முழுவீச்சில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து மகளிர் உரிமை தொகையை, மாநில தலைமை மற்றும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி சார்பில், ரேஷன் கடைகளில் மைக்ரோ ஏ.டி.எம் கருவி மூலம் பட்டுவாடா செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது.