சமூக வலைதள தன்னார்வலர்கள் கூட்டத்தில் பேசிய தமிழக முதல்வர் ஸ்டாலின், ‘ உங்கள் அனைவரின் பதிவுகளையும் நான் நேரம் கிடைக்கும் போது பார்த்து வருகிறேன். நெகடிவ் பிரசாரம் செய்து அவதூறு பரப்புவதை விட பாசிடிவ் கருத்துக்களை பரப்ப வேண்டும். என்னுடைய பேச்சை லைக் செய்வதோடு விட்டு விடாமல் ஷேர் செய்ய வேண்டும். அப்போதுதான் அது உங்களை போல் அனைவரின் பார்வைக்கும் செல்லும், வெற்றி நம்மை வந்தடையும்” என்றார்