இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக அரசு எச்சரித்து வந்தாலும் மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். அதன்படி தற்போது பகுதி நேர வேலை என்ற பெயரில் மற்றொரு மோசடி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. வீட்டில் இருந்து பணியாற்றும் வகையில் வேலை தருவதாக கூறி மக்களை ஏமாற்றி சுமார் 158 கோடி மோசடியில் ஈடுபட்ட கும்பலை போலீசார் பெங்களூரு நகரில் கைது செய்துள்ளனர்.

பெங்களூரை சேர்ந்த அமீர் சோஹைல் மற்றும் இனயத் கான், மும்பையைச் சேர்ந்த சையது அப்பாஸ் அலி, மிதுன் மணீஷ் ஷா, நைனா ராஜ், சதீஷ் மற்றும் ஷஷிகாந்த் ஷா, ஹைதராபாத்தை சேர்ந்த நயாஸ், அடில் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். எனவே மக்கள் இது போன்ற மோசடிகளை நம்பி ஏமாறாமல் உஷாராக இருக்க வேண்டும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.