இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடி சம்பவங்களும் நிகழ்த்திக் கொண்டு இருக்கின்றன. அரசு இது தொடர்பாக பொதுமக்களுக்கு பல அறிவுறுத்தல்களை வழங்கினாலும் மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மக்களை ஏமாற்றிக் கொண்டுதான் இருக்கிறார்கள். இந்த நிலையில் தற்போது அமேசான் நிறுவனத்தின் ஒன்பதாவது ஆண்டு நிறைவு விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு லக்கி ட்ரா பரிசு போட்டி நடத்துவதாக மோசடி கும்பல் களமிறங்கியுள்ளது.

இதை நம்பி மக்கள் யாரும் ஏமாற வேண்டாம் என சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரித்துள்ளார். நீங்கள்தான் வெற்றியாளர் என்று கூறுவர். பரிசு அல்லது ரொக்க பணத்தை பெறுவதற்கு IGST, CGST போன்ற வரிகளை கட்ட வேண்டும் என்று கேட்டு பணம் பறிப்பர். எனவே மக்கள் எச்சரிக்கையாக இருங்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.